Home இலங்கையாழ் நகரப்பகுதியில் கழிவகற்றல்

யாழ் நகரப்பகுதியில் கழிவகற்றல்

by admin

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி இன்று யாழ் மாநகரசபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண  மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று காலையிலிருந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு  உட்பட்ட யாழ்ப்பாண நகர் பகுதி யாழ் மாநகரசபையின் சுகாதார ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டதோடு கழிவகற்றும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் குறித்த பணிகளை மேற்பார்வை செய்ததோடு குப்பைகள் தேங்கியுள்ள இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.  #கழிவகற்றல்  #யாழ்ப்பாணம்  #நகரப்பகுதி #ஊரடங்கு

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More