குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அடிபணியவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த நிபந்தனைகளுக்கு இணங்கியிருந்தால் இலங்கைக்கு மஹிந்த ஆட்சிக் காலத்திலேயே வரிச் சலுகைத் திட்டம் கிடைத்திருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இவ்வாறு இணங்கியிருந்தால் அது நாட்டின் இறைமைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் பற்றி அதிகம் பேசுகின்ற போதிலும் அதன் நிபந்தனைக் பற்றி வாய் திறக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நாட்டுக்கு ஆபத்தான 58 நிபந்தனைகளுக்கு இணங்கியே அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள அவர் பொருளாதார நலன்களுக்காக நாம் அடி பணிய வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.