குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வறட்சி நிவாரணங்களை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணங்களை வழங்குவதற்கு விசேட செயலணி ஒன்றை ஜனாதிபதி நிறுவியமை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி நிலைமை குறித்து கண்காணித்தல் மதிப்பீடுகள் செய்தல் மற்றும் தொடர்பாடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.