தமது ஊழியர்களில் சுமார் 36,000 பேரை பணி இடைநீக்கம் செய்வதற்கு British Airways நிறுவனம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்துள்ள British Airways நிறுவனம் பணிநீக்க நடவடிக்கை தொடர்பில் ஒரு வாரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
British Airways நிறுவனத்தின் விமான கபின் குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்கள் என 80 சதவீத ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்படுகின்றது. எனினும், அரசின் திட்டத்திற்கிணங்க, இவர்கள் பெற்றுவந்த 80 சதவீத ஊதியம் இவர்களுக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.