Home உலகம்கொரோனா – பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 569 பேர் மரணம் – மொத்த எண்ணிக்கை 2921 ஆகியது..

கொரோனா – பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 569 பேர் மரணம் – மொத்த எண்ணிக்கை 2921 ஆகியது..

by admin

பிரித்தானியாவில் மேலும் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலியாகி உள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த எண்ணிக்கை நேற்று புதன்கிழமை வரை ஒரேநாளில் மரணித்த 563 பேரை விட அதிக எண்ணிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் பிரித்தானிய மரணங்கள் 2921 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரேநாளில் 4224 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33718பேராக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸின் தொற்றை கட்டுப்பாட்டுள் கொண்டு வராவிட்டால் பாதிப்புகளினதும் மரணங்களினதும் இரண்டாவது உச்சம் பெற்ற நாடாக பிரித்தானியா மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பிரித்தானிய அரசாங்க தரப்புகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More