Home இலங்கை கவனிப்பிற்குரியதான பனை,தெங்கு பதநீரும் -சீவல் தொழிலாளர்களும்..

கவனிப்பிற்குரியதான பனை,தெங்கு பதநீரும் -சீவல் தொழிலாளர்களும்..

by admin


கொரோனா அனர்த்தம் நமது உள்ளூர் உற்பத்திகள் சார்ந்தும் உள்ளூர் அறிவுமுறைமைகள் சார்ந்தும் உள்ளூர்ப் பொருளாதார பொறிமுறைமைகள் சார்ந்தும் அக்கறையுடன் செயலாற்றி அவற்றினை மீளுருவாக்கம் செய்வதற்கான தேவைகளை உருவாக்கியுள்ளதுடன் அதற்கானவெளிகளையும்திறந்துள்ளது.

நாட்டின் சுயசார்பான பொருளாதார வளங்களைப் பாதுகாத்து அவற்றை விருத்தி செய்து நிலைபேறான வளர்ச்சியை எய்தப் பெறுதலே,எதிர்காலத்தில் உலகந்தழுவி திடீரென்று ஏற்படக் கூடிய பேரனர்த்தங்களால் உருவாகும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான பொருத்தமான வழிமுறையாக அமைந்திருக்கும் என்பதுதற்போதுஉணர்ந்துகொள்ளப்பட்டுவலியுறுத்தப்பட்டுவருகின்றது.

அதாவது ஏகாதிபத்திய முதலாளித்துவ நுகர்வுப் பொருளாதாரம்,வளர்ந்துவரும் நாடுகளில் விருத்தி செய்துள்ள சேவைத் தொழிற்துறையிலிருந்து விலகி அந்நாடுகள் சுயசார்பான உள்ளூர் உற்பத்தித் தொழிற்துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிச் செயற்படவேண்டும் என்பதை கொரொனா பேரனர்த்தம் நம்மைப் போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு வலியுறுத்திநிற்கின்றது.

இந்தஉற்பத்தித் தொழிற்துறையானதுமிகப்பெரும்பாலும் வினைத்திறனான கூட்டுறவுத் துறைகளூடாகவேவிருத்திசெய்யப்படவேண்டியதுமிகவும் அவசியமானதுஎன்பதும் பொருளியல் ஆய்வாளர்களால் வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

இதற்கான உதாரணமாக கரீபியன் தீவுகளுள் ஒன்றான கியூபதேசத்தின் சுயசார்புப் பொருளாதார நடவடிக்கைகளும் மருத்துவத் துறையின் விருத்தியும் எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றன. இன்று பேரனர்த்தச் சூழலில் யாரிடமும் கையேந்தாமல் வல்லரசுகளுக்கே மருத்துவ உதவிகளை வழங்கும் வல்லமையுள்ள தேசமாக கியூபா இயங்குவதற்கான அடிப்படையாக அந்நாட்டின் சுயசார்புப் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளே அமையப் பெற்றுள்ளன.

இப்பின்னணியில் இலங்கையின் சுயசார்பானஉள்ளூர்ப் பொருளாதார மூலங்களுள் ஒன்றாகஉள்ளபனைமற்றும் தென்னைசார் உற்பத்தித் தொழிற்துறைசார்ந்து அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. விசேடமாக இத்தொழிற்துறையில் ஓர் அங்கமாகிய பதநீர் எடுக்கும் சீவல் தொழிலாளர்களின் மேம்பாடு குறித்து கவனஞ் செலுத்த வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.

தற்போதய ஊரடங்கு வேளையிலும் சீவல் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளமை இத்தொழிற்துறையின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்ட நடவடிக்கையாகவே நோக்கப்படுகின்றது. இந்தவகையில் எதிர்காலத்திலும் இத்தொழிற்துறையில் ஈடுபடும் நபர்களின் மேம்பாட்டிற்கானநடவடிக்கைகள் மேலும் விருத்திசெய்யப்படவேண்டியதுகாலத்தின் தேவையாகிநிற்கின்றது.

01. இத்தொழிற்துறையில் ஈடுபடும் நபர்களின் உழைப்பிற்குரியஊதியத்தைமுழுவதுமாகப் பெற்றுக் கொள்வதற்கான கூட்டுறவுஅமைப்புவினைத்திறனுடன் இயங்கச்செய்யப்படல் வேண்டும்.

02. பதநீர் விற்பனைக்கானஅனுமதிகள் நேரடியாகவோமறைமுகமாகவோதனியாருக்குவழங்கப்படாமல் இத்துறைசார் கூட்டுறவுச் சங்கங்களுக்குமாத்திரம் வழங்கப்படுவதற்கானநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியதுமிகவும் அவசியமாகும்.

03. பதநீர் எடுப்பதில்அறிவும் திறனும் ஆர்வமும் உள்ளநபர்களை இனங்கண்டுஅவர்களுக்கானஅனுமதிகள் வழங்கப்பட்டுஅவர்கள்ஒருங்கிணைந்து கூட்டுறவுச் சங்கமாக இயங்கக் கூடியநடவடிக்கைகளைமேற்கொள்வதுதேவையாகவுள்ளது.

04. சீவல் தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கான சமூகப்பாதுகாப்பு நிதியஅங்கத்துவம், மற்றும் காப்புறுதிஅங்கத்துவம் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல்.

05. இலங்கையில் வினைத்திறனுடன் இயங்கிக்கொண்டிருக்கும் இத்துறைசார்ந்த சங்கங்களின் முன்மாதிரியான நடவடிக்கைகளை இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் அறிந்து, விளங்கித் தமது கூட்டுறவு நடவடிக்கைகளை மேம்படுத்துவற்கான இணைப்பாக்கங்களை மேற்கொள்ளுதல்.

06. பாதுகாப்பான முறைமையில் பதநீர் பெறுவதற்கான தொழில் நுட்ப வசதிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குதல். பிறநாடுகளில் இதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன.

இவ்விதமாக சீவல் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் மேலும் இனங்காணப்பட்டு அவற்றுக்குரிய ஆக்கபூர்வமான தீர்வுகள் கண்டறியப்பட்டு நடைமுறைக்கு வரும்பொழுது, அது நமதுநாட்டின் உள்ளூர்ப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் உருவாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினைக்கு பகுதியளவில் தீர்வுகளை வழங்கும் நடவடிக்கையாகவும் அமைந்திருக்கும். நமதுநாட்டின் பனைமற்றும் தென்னைவளங்களின் பாதுகாப்பிற்கும் விருத்திக்கும் வாய்ப்புக்களைஉருவாக்கிக் கொடுக்கும். இத்தோடு சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு, நுகர்வு மற்றும் இத்தியாதிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவும் அமைந்திருக்கும்.

கலாநிதிசி.ஜெயசங்கர்
து.கௌரீஸ்வரன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More