Home இந்தியாஅலங்காநல்லூரில் போராட்டம் மேற்கொண்டவர்கள் கைது – விடுதலை செய்யுமாறு கோரி சென்னையில் மாணவர்கள் போராட்டம்

அலங்காநல்லூரில் போராட்டம் மேற்கொண்டவர்கள் கைது – விடுதலை செய்யுமாறு கோரி சென்னையில் மாணவர்கள் போராட்டம்

by admin


அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை சென்னையிலும் போராட்டம் தொடரும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அறிவித்துள்ளனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வருகிறது என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை மெரினா கடற்கரையில் அதிகமான  மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் உள்ள மாணவர்கள் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More