Home உலகம்இத்தாலி – ஸ்பெயின் நாடுகளில், கொரோனா தாக்கம் குறைகிறது…

இத்தாலி – ஸ்பெயின் நாடுகளில், கொரோனா தாக்கம் குறைகிறது…

by admin

உலகில்   15,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்த இத்தாலியில், சற்று நம்பிக்கை தரும் வகையான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளது. தினமும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் 1,24,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது அது குறைந்து வருவதாக இத்தாலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை கொரோனா தொற்றால் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்படும் கட்டத்தை ஓரளவு  கட்டுக்குள் கொண்டுவரும் நிலையில் இருப்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்சேஸ் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றால் ஒருநாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். எனினும், ஸ்பெயினில்  ஏப்ரல் 26ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இதுவரை 1,26,168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 11,947 பேர் உயிரிழந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More