140
பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 621 பேர் மரணித்துள்ளதாக சுகாதாரசேவையின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த மரணங்களில் ஆரோக்கியமான உடல் நலத்தைக் கொண்ட 35 வயதுடையவரும், உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரிப்புடன் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4974 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனோ வைரஸ் தொற்றுக்கான நேர் மறைப் பரிசோதனையின் பின் 5,903 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
Spread the love