Home உலகம்கொரோனா – இல்-டு-பிரான்ஸில் எதிர் வரும் 10 நாட்களுக்கு பாதிப்புகள் உச்சமாக இருக்கும்?

கொரோனா – இல்-டு-பிரான்ஸில் எதிர் வரும் 10 நாட்களுக்கு பாதிப்புகள் உச்சமாக இருக்கும்?

by admin

பிரான்ஸில்  கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்துள்ளதோடு, 250 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதாரத் துறை இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 390 பேர் கடந்த 24 மணிநேரத்தில் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 6978 பேர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5889 பேர் இதுவரை மருத்துமனைகளிலும், 2189 பேர் முதியோர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 8078ஆக அதிகரித்துள்ளது. 28891 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு, இவர்களில் 748 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இல்-டு-பிரான்ஸ் பகுதியில்  நாளை திங்கட்கிழமை முதல் பத்து நாட்களுக்கு ஏற்படும் உயிரிழப்புக்கள், இதுவரை ஏற்பட்ட இழப்புகளோடு ஒப்பிடுகையில் உச்சகாலமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை  நோக்கத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More