Home உலகம்கொரோனா – பொரிஸ்ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – மீண்டு வர டிரம்ப் வாழ்த்து… 

கொரோனா – பொரிஸ்ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – மீண்டு வர டிரம்ப் வாழ்த்து… 

by admin

பிரித்தானிய  பிரதமர் பொரிஸ்ஜோன்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனைக்குச் செல்வதாகவும் பொரிஸ்ஜோன்சன் குறிப்பிட்டார். அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் - சர்வதேச செய்திகள்

இதேவேளை பிரித்தானிய பிரதமர் கொரோனா தொற்றுடன் போராடி மீண்டு வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க மக்கள் அனைவரும் பொரிஸ்ஜோன்சனின் நலனிற்காக இறைவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More