தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) 100ஆவது பிறந்த தினம் தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கதின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்பாக 100ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றது.
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தி அவரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்தார். இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக இந்திய துனைதூதுவர் அ.நடராஜன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தனது சொந்த நிதியில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் வறியமக்கள், மாற்றுதிறநாளிகள்,பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 100க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு உடுபுடவைகள்,சிறு தொகை பணம் என்பவற்றை வழங்கிவைத்தார். இன் நிகழ்வில் வர்த்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர். யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் வருடம் தோறும் எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உடுபுடவைகள் வழங்கி வருகின்றமை குறிபிடத்தக்கது.கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையும் இவரது சொந்த நிதியில் அமைகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.