222
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் நிலவி வரும் வறட்சிகாரணமாக ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் வறட்சி நிலைமை காரணமாக 1,11,329 குடும்பங்களைச் சேர்ந்த 60,6478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 1,49,668 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்பொழுது அந்த அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love