குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விமல் வீரவன்சவின் ஜே.என்.பி கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்தவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக பத்ம உதயசாந்த அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான வீரகுமார திஸாநாயக்கவிடம் அண்மையில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.