குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இதன்போதே முன்னாள் போராளிகள் ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி ஆளுநருடன் முன்னாள் போராளிகள் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்
இதன் பொது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் இதற்கான சுமூகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகவும் தன்னால் கால அவகாசம் சொல்லமுடியாது ஆனால் நல்ல முடிவை பெற்றுத்தருவேன் எனக் குறிப்பிட்டார்
அத்துடன் தொண்டராசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கிய சம்பவம் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன் எனவும் அவர்களுக்குக் கூட அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாகவும் மிகவிரைவில் அவர்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் எனவும் தெரிவித்தார்