155
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (10) இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின்போது மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ள சுகாதாரப் பிரிவு அந்தவகையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வாறு 197 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #அதிகரிப்பு
Spread the love