Home உலகம்அமேசன் காடுகளில் வசித்து வந்த பழங்குடியின சிறுவனும் கொரோனாவால் பாதிப்பு

அமேசன் காடுகளில் வசித்து வந்த பழங்குடியின சிறுவனும் கொரோனாவால் பாதிப்பு

by admin

அமேசன் காடுகளில் வசித்து வரும் யனோமாமி என்னும் இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசினால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதுடன் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்ப்பட்டுள்ளனர்.

சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது அமேசன் காடுகளுக்கும் நுழைந்துவிட்டது. அமேசன் காடுகளில் வசித்து வரும் யனோமாமி என அழைக்கப்படும் பழங்குடியினத்தவர்கள் பெரும்பாலும் வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள் என்ற போதிலும் கொரோன இவர்களையும் விட்டுவைக்கவில்லை. யனோமாமி இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மேன்டெட்டா, தற்போது அந்த சிறுவன் ரோரைமா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  #அமேசன்  #பழங்குடியின  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More