எதிர் வரும் செப்டம்பரில், கொரோனா வைரஸிற்கான, எதிர்ப்பு தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பாற்றலியல் பிரிவு பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Sarah Gilbert Nuffield Department of Medicine – University of Oxford) தெரிவித்துள்ளார்.
பிபிசி வானொலி சேவையின் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் சாரா கில்பேர்ட், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனைகள் வெகு விரைவில் நடைபெற உள்ளது. அது வெற்றியடையும் பட்சத்தில் மிகப் பெரிய அளவில் உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“நாம் பெருமளவிலான உற்பத்தி திறனை இந்த ஆண்டே அடைய முடியாது என்றாலும் கூட, விரைவில் உற்பத்தியை ஆரம்பிப்பது சாலச்சிறந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
Thanks BBC