Home இலங்கை உள்ளுர் வாழ்வியல் முறைகளும் எதிர்கொள்ளும் சவால்களும் – கலாவதி கலைமகள்..

உள்ளுர் வாழ்வியல் முறைகளும் எதிர்கொள்ளும் சவால்களும் – கலாவதி கலைமகள்..

by admin


உள்ளுர் அறிவு முறையியலும் அதன் பரவலாக்கமும் என்பது மனிதத்தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. அறிவு முறையியல்கள் உள்ளுர் நம்பிக்கைகளாக வீடுகளில் வாழ்வில் இயல்பாய் கடைப்பிடிக்கப்படுபவை பெண்வழிரீதியான கடத்தலினையும் தொடர்பினையும் கொண்டவையாக காணப்படுபவை. குறிப்பாக சமையல் முறைகள், கைவைத்தியம், வேம்பு, மஞ்சள், நன்னாரி, இஞ்சி போன்றவை சாதாரண உணவுப் பழக்கத்திலும் அத்துடன் வாழ்வியலிலும் கடைப்பிடிக்கப்படுவை. வாசலில் மஞ்சள்நீர் தெளித்தல், வேப்பஇலை சடங்குகளிலும் நுளம்பு, கொசுக்களை விரட்டவும் பயன்படுத்தப்படுபவை. இத்தகைய வாழ்வியல் முறையைக் கொண்டதாகவே நமது வாழ்வியல் இருந்துவந்துள்ளது.

உள்ளுர் பொருளாதார முறையில் சிறு உற்பத்தி, வீட்டுத்தோட்டம், பண்டமாற்றல் முறை என்பவை சாதாரணமாக உள்ளுர்களில் இருப்பவை. தங்களிடம் விளைந்தவற்றைக் கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தங்களது உற்பத்தியில் ஒருபகுதியைக் கொடுத்து அதற்குப்பதிலாய் வேறு ஒரு பொருளைப் பெறுவது என்பது இலகுவாய் மக்களிடமிருந்த பழக்கமாகும். இதற்கான முறையியல் ஒவ்வொரு கிராமத்திலும் காணபப்டுகின்றது. இங்கு மனிதத்தேவை என்பதே முக்கியமானதாக காணப்படுகின்றது. மனிதர் ஒவ்வொருவரும் தன் உற்பத்தியை பகிர்ந்தளிப்பவராக காணப்படுகின்றனர்.

இப் பொருளாதாரம் என்பது பண்பாட்டில் இணைந்ததாய் மக்களின் நம்பிக்கைகளுடன் இணைந்ததாய் வாழ்வில் கடைப்பிக்கப்பட்டு வந்துள்ளது. சடங்குக் கோயில் காலங்களில் மட்பாண்டபொருட்கள் அதிகம்  உற்பத்தி செய்யப்படல். போன்றவற்றினை குறிப்பிடலாம்.

இத்தகைய வாழ்வியலில் இருந்து விடுபடுவது நவீனமாகவும் காலத்தின் வாழ்வின் தேவையாக உணரச் செய்யப்பட்டு வந்துள்ளமையை நாம் அவதானிக்கலாம். மாற்றங்கள் வீட்டில் பாவிக்கப்படும் பொருட்களில் இருந்து நமது உணவுசார் பண்பாடு மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் ஏற்படுத்தப்பட்டு வந்திருப்பதனைக் காணலாம்.

இத்தகைய மாற்றங்கள் நம்முடைய வாழ்வில் மிகபாரியதாக்கங்களை செலுத்திவந்திருப்பதுடன் வாழ்வியலை சிந்தனைப் பரம்பலைமுமுமையாக மாற்றியுள்ளது.
எங்களது சுயமான வாழ்வியலை பொருத்தமற்றதாய் இக்காலத்திற்கு ஏற்றதற்றதாய் காலனிய சிந்தனை, முதலாளிய பொருளாதாரமுறை, உலகமயமாக்கல் போன்றவை இல்லாமல் செய்திருக்கின்றன. அதிக முதலீடு, இலாபம், உபரி, என்னும் முதலாளிய பொருளாதார முறை உள்ளுர்நம்பிக்கை, அறிவு, பொருளாதாரமுறை போன்றவற்றில் பாரியமாற்றங்களை ஏற்படுத்தியதனைக் காணலாம்.

சிறு உற்பத்தி பொருளாதார முறை பாரிய இலாமீட்டலில் கவனிக்கபடாத ஒன்றாய் ஒதுக்கி விடப்பட்டது. பாரிய உற்பத்தி முறையியல் உள்ளுர் பொருளாதார முறையின் சிறு உற்பத்திச் சந்தைகளை இல்லாமல் செய்தும் ஆக்கிரமிப்பும் செய்தது. குறிப்பாக உள்ளுர் பொருளாதார முறை என்பது தேவையினை அடிப்படையாகக்கொண்ட உற்பத்தியாய் காணப்பட முதலாளிய பொருளாதாரம் இலாபமீட்டலை உபரியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியாய் காணப்பட்டது. அதிக உற்பத்திக்கான சந்தை என்பது அவசியதானது. எனவே சிறு உற்பத்திகளின் சந்தைகளை ஆக்கிரமிப்புச் செய்தது. இவ் ஆக்கிரமிப்பு என்பது எமதுகல்வி. இலத்திரனியல் ஊடகங்கள், விளம்பரங்கள் வாயிலாக செயற்படுத்தின.

குறிப்பாக உள்ளுர் உற்பத்திகள் தரமற்றவை, போசாக்கற்றவை, நீண்டபாவனைக் குரியதல்ல, இலகுவாய் ( காலடியில்) பெற்றுக் கொள்ளமுடியாது. போன்ற கருத்து பரவல்செய்யப்பட்டது. முதலாளிய உற்பத்திகள் சிறுசிறுசந்தைகளிலும் இடம்பிடித்தன. மனிதத் தேவைகளை நிர்ணயிப்பது முதலாளியகைகளுக்குச் சென்றது. நாம் எந்தப் பொருளை வாங்குவது என்பதனை விளம்பரங்கள் தீர்மானித்தன. எந்தப்பொருளையும் எங்கும் வாங்க முடியும் என்னும் தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது.

இத்தகைய பொருளாதாரமுறை என்பது உள்ளுர் பொருளாதாரமுறை, உள்ளுர் அறிவியல் முறைகளை இக்காலத்திற்கு ஏற்புடையதற்றதாய் பயன்பாடற்றதாய் அருங்காட்சியத்திற்கும் பார்வையிடலுக்குமானதாய் மாற்றியது.

இதற்கு உதவி செய்வதாய் ஊக்கப்படுத்துவதாய் எமது கல்வி அறிவு அமைந்தது. கல்வி முறை என்பது காலனிய சிந்தனையைப் பரவலாக்கியது. எம்மை சிந்திக்கவைத்தது.

இதன் உச்சகட்டம் காலனிய அறிவின் அறவியல் கொண்டு உள்ளுர் அறிவுமுறையினை ஆய்வுசெய்யவும் அளவிடவும் மதிப்பீடு செய்தும் பொருத்தமற்றவையாய் நிருபித்தது. மேற்கைரோப்பிய அறிவியலின் கோட்பாட்டில் நின்று எங்களது வாழ்வியல், பண்பாடு மீண்டும் எங்களுக்கே அறிமுகம்செய்யப்பட்டது.

இத்தகைய காலனியச் சிந்தனை முதலாளிய உலகமயமாக்கலுக்கான வித்தனைஇட்டது. உலகைச் சுருக்கி உள்ளங்கைக்குள் கொண்டுவரும் முதலாளிய கனவினை விதைத்தது. இதற்கு மாற்றான சிந்தனை செயற்பாடு கொண்டோர் முதலாளிய கனவிற்கு அச்சுறுத்தலானவர்கள் சூனியக்காரிகளாக அபாயகரமானவர்களாக தீர்மானிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்படனர்.
இவ்வாறாய் உள்ளுர் பொருளாதார முறை, உள்ளுர் அறிவு முறை இல்லாமல் செய்யப்பட்டது. நாம் நம் மீது திணிக்கப்பட்ட அறிவு முறைகளை மீட்டெடுத்தலும் நம்உள்ளுர் அறிவுமுறைகளை மீளவும் அனைவருக்குமானதாய் அதிகார ஆதிக்கசிந்தனை அற்றதாய் முன்வைத்தலுமே தன்னிறைவான நோயற்ற வாழ்வை நம்மிடம் உருவாக்குவதற்கான வழிவகையாக அமையும்.

கலாவதிகலைமகள்.

பெய் எனப் பெய்யும் மழை

ஊர் அடங்கிஉலகடங்கி
விலங்குகள் மட்டும்சுதந்திரமாய்
முன்னம் நடந்ததங்கள் பாதைகளில்
நடக்கின்றன.
வளிமாசடைதல் இல்லை
நீர்நிலைஅசுத்தம் இல்லை
இயற்கைமீண்டும் மீள் சுழற்சிசெய்கின்றது

மனிதர்வீட்டுள் முடங்கி
யன்னல் கதவின் இடுக்கின் வழி உலகைநோக்கியபடி
அவள் மட்டும்
அதேபதட்டத்தோடு
காலைமாலைமதியம் சமைக்கத் தொடங்கி
குழந்தைகளைகுழிப்பாட்டிசோறூட்டி
குழந்தைகளைதூங்கவைத்துதான் குழித்துஉண்டுஉறங்கிவிழித்து
இடைஇடையேகணவன் கொறிக்கநொறுக்குத்தீன் கொடுத்து
ரிவிசெய்தி,லுடோ,தாயம்,பொழுதுகள் அலுப்பின்றிப் போகஅவன் ஆணாய்

இடைஇடையேவீட்டில் இருந்தபடியே
அரசஊழியர்களைப் பணியாற்றுமாறுஅரசசெய்திகள் தொடர

மீண்டும் மீண்டும் சமைத்துகணவன் கடமைஆற்றி
பெய் எனபெய்யும் மழை
கற்பின் இலக்கணத்தைமுதுகில் சுமந்தபடி
காசுNதுடி
கறிதேடி
அரிசிNதுடி
சமூர்த்திபணம் பெறநடுவெயிலில் கியுவில் நின்று
உறைப்பு கூட
உப்பில்ல
உனக்;குகொழுப்பும் கூட
உதைத்துத் தள்ளி
தலைமுடிபிடித்திழுத்து
சுவற்றில் மோதி
கணவனாய் ஆணாய் தலைவனாய்
பல்வேறுஅவதாரங்கள்

ஆம்பிளவீட்டில் சும்மதானே இருக்கான் நாமதான் அனுசரித்துப் போகணும்
இவ்வளவுகாலமும் உழச்சவன் தானே
சுவர்கள் யன்னல்கள் கதவுகள் எல்லாம் விழுங்க
சுவரோடுசுவராய்

காதல்
நம்பிக்கை
பொருத்தங்கள்
திருமணங்கள்
மந்திரங்கள்
எல்லாம் பொய்த்துபோயின.

கலாவதிகலைமகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More