கடந்த சில தினங்களாக வடக்கு உக்ரைனில் பற்றி எரியும் காட்டுத்தீ செர்னோபில் அணு உலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத்தீக்கும் செர்னோபில் அணு உலைக்கும் 2 கி,மீ தொலைவே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுpக்னறது.
அதிகாரிகள் எதிர்பார்ப்பதனைவிட அங்கு பெருந்தீ எரிந்து கொண்டிருப்பதாக க்ரீன் பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 1986 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட அணு உலை விபத்தை அடுத்து அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. செயல்படாத அணு உலையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில்தான் மக்கள் வசிக்கிறார்கள். காட்டுத்தீயை அடுத்து ஏப்ரல் 5ஆம் திகதி ரேடியேசன் அளவு 16 மடங்கு அதிகரித்துள்ளதாக உக்ரைன் சூழலியல் கண்காணிப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 300 தீயணைப்பு படை வீரர்கள் இரவுபகலாக தீயை அணைக்க போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #செர்னோபில் #அணுஉலை #காட்டுத்தீ