வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடமாகலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஆரிப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் சோதனை நடவடிக்கையதனது பல நாடுகளில் ஆய்வு கட்டத்திலேயே உள்ளது. இதனால் தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக அளவில் கொரோனா வைரஸ் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது எனத் தெரிவித்த அவர் இத்தாலி, ஸ்பெயினில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் அமெரிக்கா , பிரித்தானியா, துருக்கியில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். #கொரோனா #தடுப்புஊசி #உலகசுகாதாரநிறுவனம்