Home இலங்கை சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல் அரசியல் தீர்வு குறித்து பேசுவதால் பலனில்லை – கிழக்கு மாகாண முதலமைச்சர்

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல் அரசியல் தீர்வு குறித்து பேசுவதால் பலனில்லை – கிழக்கு மாகாண முதலமைச்சர்

by admin

சிறுபான்மை மக்களின்  நம்பிக்கையை வென்றெடுக்காமல் அரசியல் தீர்வு குறித்து  பேசுவதால் எவ்வித பலனுமில்லை எனவும் சிறுபான்மை மக்களின் மனங்களில்  முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி இதுவரை தவறியுள்ளமை அப்பட்டமான உண்மை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

சிறுபான்மை மக்கள் கடந்த ஆட்சிகாலத்திலிருந்து எதிர்நோக்கி வரும் இனவாதம் மற்றும்  மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்கு இதுவரை அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை எடுக்காமை மக்கள் மத்தியில் பாரிய ஏமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையை அவர்களுடன் கலந்துரையாடும் போது  அறிந்து கொள்ள முடிவதாகவும் அவர்  சுட்டிக்காட்டினார்,

மேலும் கிழக்கின் பல பகுதிகளில் இன்னும்  பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினர் வசம் உள்ளமையும் அது குறித்து  அந்த பல போராட்டங்களை மக்கள் முன்னெடுத்த போதிலும் இதுவரை அரசாங்கத்தினால் சாதகமான பதில்கள் கிடைக்காமை அந்த மக்கள் மத்தியில் அதிருப்தியுணர்வை தோற்றுவித்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ,குரங்குப்பாஞ்சான் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்களின் விவசாய நிலங்களும் குடியிருப்பு நிலங்களும் யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல கடந்த போதும் இன்னும் படையினர் வசமும் விடுவிக்கப்படாமல் இருப்பது  மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது எனவும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் கிழக்கில் ஏற்கனவே பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வறுமையை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்பதும் மக்களின் விவசாயக் காணிகள் விடுவிக்கப்படுவதன் ஊடாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஏதுவாக அமையும் என்பதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More