Home இலக்கியம்மனிதர்கள் வாழும் உலகமே…. சி.ஜெயசங்கர்.

மனிதர்கள் வாழும் உலகமே…. சி.ஜெயசங்கர்.

by admin


மனிதன், மனிதன் என்று படிப்பதன் ஊடாகவும்,
எழுதுவதன் ஊடாகவும்
இந்த உலகத்தை ஆண்களின் உலகமாக
மனதுள் பதிய வைக்கப்பட்டிருக்கும்,

உலகம், மனிதனுக்கானது
மனிதனுக்கு மட்டுமேயானது..
ஏனைய எல்லாம்
எல்லா உயிர்களும்
அந்த மனிதனுக்காக மட்டுமே!
அந்த மனிதகுலத்துக்காக மட்டுமே!
என எங்களுக்குள் பதிய வைக்கப்பட்டிருக்கும்,

சிந்தனைகளிலிருந்து எங்களை விடுதலை செய்தல்
இந்த அழகான பூமியில்
மனிதர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான
அடிப்படையாகின்றது.

ஆண், பெண் என்றும், சாதிகளென்றும்,
இனங்கள் மற்றும் மதங்கள் என்றும்
மனிதர்களே உருவாக்கிய உயர்வு, தாழ்வு
நரகங்களிலிருந்து விடுபட்டு,
வித்தியாசங்களைக் கொண்டாடுகின்ற,
மனிதர்களை மனிதர்கள் விரும்புகின்ற,
எல்லா உயிர்களையும் விரும்புகின்ற,
இயற்கையை விரும்புகின்ற
மனிதர்கள் வாழும் உலகமே சுவர்க்கமாகும்.
சி.ஜெயசங்கர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More