166
சங்கரத்தை கேணியடி வைரர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வயல் காணியில் தண்ணீர் பவுசரில் கொண்டு வரப்பட்ட கழிவுநீர் பாய்ச்சியதால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வேளை, தண்ணீர் பவுசர் ஒன்றில் கொண்டுவரப்பட்ட கழிவு நீர், சங்கரத்தை கேணியடி வைரர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வயல் காணியில் பாய்ச்சப்பட்டது. அதனையடுத்து அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது.
இதுதொடர்பில் அந்த பவுசரில் வந்தவர்களிடம் கேட்ட போது, எள்ளுப் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டதாகத் தெரிவித்தனர். எனினும் அந்தக் காணியில் எந்தவொரு பயிர்ச்செய்கையும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அந்தப் பகுதி மக்களால் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. #சங்கரத்தை #கழிவுநீர் #துர்நாற்றம்
Spread the love