Home இலங்கைகொரோனா ஒழிப்புக்காக எந்தவொரு நாட்டு ராணுவத்தையும் கோரவில்லை :

கொரோனா ஒழிப்புக்காக எந்தவொரு நாட்டு ராணுவத்தையும் கோரவில்லை :

by admin


இந்தியா மாத்திரமன்றி எந்தவொரு நாட்டிலிருந்தும் ராணுவத்தை தாம் ஒருபோதும் கோரவில்லை என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக நேற்றைய தினம் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தாம் எந்தவொரு நாட்டு ராணுவத்தின் ஒத்துழைப்புக்களையும் நாடவில்லை என கூறியுள்ளார்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை பாதுகாப்பு பிரிவு ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். #கொரோனா  #ராணுவத்தை  #கமல்குணரத்ன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More