Home இலங்கைகாவல்துறை உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

காவல்துறை உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

by admin

 

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை நிலையத்தில் பணியாற்றும்  காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதுதொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் காவல்துறை உத்தியோகத்தர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை காவல் நிலையத்தில் பணியாற்றும் மானிப்பாயைச் சேர்ந்த தமிழ் காவல்துறைஉத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். அவர் அழைத்து வந்ததாகக் கூறப்படும் பெண்ணும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, அந்தப் பெண் கொரோனா அபாய வலயமான புத்தளத்திலிருந்து கடல் வழியாக படகுமூலம் மன்னாருக்கு சென்றிருந்த நிலையில் காவல்துறை  உத்தியோகத்தரால் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. #காவல்துறை   #இடைநிறுத்தம் #சுயதனிமைப்படுத்தல் #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More