ஆசியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக 50 லட்சம் மக்கள் தொகையை சிங்கப்பூர், மாறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் தொடக்கக் கட்டத்தில் முன்மாதிரி நாடாக கருதப்பட்ட சிங்கப்பூரில் தற்போது கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதன் மூலம், 100 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட சீனா மற்றும் இந்தியாவிற்கு அடுத்து ஆசிய கண்டத்தில் அதிகபட்ச நோய்த்தொற்றுகளை கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது.
சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மத்தியில் நோய்த்தொற்று பரவுவது கண்டறியப்பட்டவுடன் அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் புதிதாக 931 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பதுடன் அதில் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்கள் 15 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது #ஆசியா #கொரோனா #சிங்கப்பூர்