Home இலங்கைஊரடங்கினால் பாதிக்கப்படும் தோட்ட செய்கையாளர்கள்

ஊரடங்கினால் பாதிக்கப்படும் தோட்ட செய்கையாளர்கள்

by admin

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் தேவராசா. இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

குறிப்பாக குடை மிளகாய் , பயிற்றை , கச்சான் போன்ற பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்ற ஆறுமுகம் தேவராசா தன்னுடைய உற்பத்திகளை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த விலைக்கு விற்பனை செய்து வழ்வாதாரத்தை நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அரசாங்கத்தினால் ‘கொரோனா’ பாதுகாப்புக்கு என மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் முழுமையாக மூடப்பட்டு உள்ளது.

இதனால் கடந்த பல நாட்களாக தன்னுடைய உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத நிலையில் மரக்கறிகளை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் அறுவடை செய்தால் அடி மட்ட விலைக்கே உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யக் கூடியதாக உள்ளதாகவும் ஆறுமுகம் தேவராசா கவலை தெரிவிக்கின்றார்.

இதனால் தான் தற்போது பூக்கள் மற்றும் காய்கள் உருவாகுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலப்பகுதியில் அரசாங்கத்தினால் உள்ளூரில் குறித்த மரக்கறிகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும் வாகனங்களில் கிராமம் கிராமமாக கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்டாலும் குறைந்த விலைக்கே விற்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.

அதேபோல் தற்போதைய நிலையில் உரம் , பசளைகளை பெற்றுக் கொள்வதும் கடினமாக இருப்பதாகவும் அரசாங்கம் விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு மானிய அடிப்படையிலோ அல்லது கடன் அடிப்படையில் உரங்களை வழங்கி உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு தன்னுடைய முக்கிய செய்கையான பயிற்றை செய்கைக்கு தற்போது ஆயிரம் தடிகள் தேவையாக உள்ளதாகவும் அதை கூட தன்னால் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலை காணப்படுவதாகவும் , எனவே தனக்கு தற்போது தடிகளை பெற்று கொள்ளவோ அல்லது வெட்டவோ அதிகாரிகள் அனுமதி வழங்கினால் உதவியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். #கொரோனா  #ஊரடங்கு  #பயிர்ச்செய்கை

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More