Home இலங்கைமீள்குடியேற்றப்பட்ட முகமாலைப்பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் அதிருப்தி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

மீள்குடியேற்றப்பட்ட முகமாலைப்பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் அதிருப்தி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால் தமக்கான இருப்பிடங்களை அமைக்க முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மக்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தினரின் வேலி காரணமாக அவற்றை அமைத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் குறித்த வேலியை தமது காணிகளில் இருந்து சற்று நகர்த்தினால் தமக்கான வீடுகளை அமைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கும் மக்கள், இவ்விடயம் குறித்து முகாமுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரி, கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் முறையிட்டும் எவ்வித பயனும் கிட்டவில்லையென தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More