நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமெனத் தெரிவித்துள்ள ராணுவத்தினர் இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்குர் பதிலராக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிப்பதாக குறிப்பிட்டுள்ள ராணுவத்தினர் கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் சிலரை கடந்த திங்கட்கிழமை சந்தித்த வேளையிலேயே மேற்படி தெரிவித்துள்ளனர். அத்தோடு, படை முகாம் அங்கிருந்து அகற்றப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த காணி மக்களிடம் கைளிக்கப்படும் எனவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஈழப் போரின் இறுதிச் சமரில் நந்திக்கடல் முக்கிய பங்கை வகிக்கின்றது. குறிப்பாக நந்திக்கடல் பகுதியிலேயே விடுதலைப் புலிகளின் தலைவரது உடல் கிடைக்கப்பெற்றதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.