216
கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக்கோட்டை மற்றும் அச்சுவேலி காவற்துறைப் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love