இலங்கையில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 172 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
பூரண குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா..
ஜா – எல கபாலாகந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி, பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்றவர், மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இத்தாலியில் இருந்து சென்ற ஒருவருடன் நெருங்கிய உறவை பேணிய ஒருவரே மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இவர் கடந்த 16 ஆம் திகதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றிருந்தார். அவ்வாறு சென்ற அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். எனினும் குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவை உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.