விக்கி லீக்சுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்டமைக்காக வழக்கில் 35 ஆண்டு சிறை தண்டனை பெற்ற திருநங்கையை மன்னித்து, விடுதலை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு 29 வயது திருநங்கையான செல்சியா மன்னிங் என்பவர் விக்கிலீக்சுக்கு ரகசிய ஆவணங்களை திருடி வழங்கியதாக கைது செய்யப்பட்டு அவருக்கு 35 ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.சுமார் ஏழு வருடம் சிறை தண்டனை அனுபவித்த செல்சி தற்போது விடுதலை செய்யப்பட இருக்கிறார்.
ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய அவர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டதனையடுத்து 2 தடவை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
அவர் அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை தைரியமாக வெளியுலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ள அவரை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ள நிலையில் அவரை மன்னித்து, விடுதலை செய்யுமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.