Home இலங்கைஊரடங்குவேளையில்  மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளை

ஊரடங்குவேளையில்  மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளை

by admin

(க.கிஷாந்தன்)

திம்புள்ள  – பத்தன காவல்துறைபிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04.05.2020) அதிகாலை உடைக்கப்பட்டு, மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.

நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கே தளர்த்தப்பட்டது. எனினும், ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியிலேயே – அதாவது அதிகாலை 1.30 மணியளவிலேயே குறித்த மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட மதுபான போத்தல்களை, பெட்டியில் போட்டுக்கொண்டு மதுபான சாலைக்கு அருகில் இருந்த குறுக்கு வழியொன்றின் ஊடாக இவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு தப்பிச்செல்லும் வேளையில், அவ்வழியில் இருந்த வீடொன்றில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரீவி கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வீடொன்றின் மதில் மீது ஏறி தப்பிச்செல்ல முற்படும் காட்சிகள் விளங்கினாலும், மின் விளக்கின் எதிர்திசை ஒளி காரணமாக நபர்களின் முகங்களை சரிவர அடையாளம் காணமுடியவில்லை.

இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை திம்புள்ள – பத்தன காவல்துறையினர்  ஆரம்பித்துள்ளனர். c#ஊரடங்கு  #மதுபானசாலை  #கொள்ளை

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More