Home இலங்கைகொலை சந்தேகநபர்கள் கைது

கொலை சந்தேகநபர்கள் கைது

by admin

தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்   காவற்துறையினர் கூறினர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். அவரது மைத்துனர்கள் மூவரே வீடு புகுந்து உயிரிழந்தவரை வாளால் வெட்டியதாக விசாரணைகளில் தெரிவிக்ககப்பட்டது.

இருதரப்புக்கும் இடையே மோதல் இடம்பெற்ற நிலையில் சகோதரர்கள் மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டார். அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தரின் பாதுகாப்பில் உள்ளனர்.

அத்தோடு உயிரிழந்தவரின் துணைவியும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார். #கொலை  #கைது #மிருசுவில்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More