Home இலங்கைதிருச்சபை நினைவு கல்வெட்டுகளை சேதமாக்கியவர்கள் கைது

திருச்சபை நினைவு கல்வெட்டுகளை சேதமாக்கியவர்கள் கைது

by admin

நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம்  தொடர்பாக மானிப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் கிறிஸ்தவர்கள் என்றும் இருவர் இந்துக்கள் என்றும்  காவற்துறையினர் கூறினர். சந்தேக நபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று  காவற்துறையினர் தெரிவித்தனர் #திருச்சபை   #நவாலி  #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More