Home இலங்கைகொரோனா – பாதிக்கப்பட்ட வியாபார நிறுவனங்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டது…

கொரோனா – பாதிக்கப்பட்ட வியாபார நிறுவனங்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டது…

by admin

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மே மாதம் 15 ஆம் திகதிவரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வழங்க சம்பந்தப்பட்டவர்கள் அதீத முனைப்பைக் காட்டி வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி தொழில் திணைக்களத்தின் இணைய முகவரியான www.labourdept.gov.lk க்குள் பிரவேசத்து இந்த செயற்பாட்டுடன் இணைந்துக்கொள்ள முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More