குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அதுரலிய ரதன தேரர் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அதி உயர் சங்கபீடத் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்க எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டியுள்ள அவர் எனினும் அதனை விடவும் பதவியை துறப்பது மிகவும் பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார்.
அம்பிலிபிட்டியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்காது பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்குதன் ஊடாக மட்டும் ரதன தேரரின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பொதுமானதாக அமையாது என தெரிவித்துள்ள அவர் 2015ம் ஆண்டு ஜனவரி 8ல் ஏற்பட்ட மாற்றத்தின் முக்கிய காரண கர்த்தாக்களில் ரதன தேரரும் ஒருவர் எனவும், நல்லாட்சி குறித்த அவரது விமர்சனங்கள் நியாயமானவை எனவும் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.