Home இலங்கைசுரங்கத்தினுள் கசிப்பு கண்டுபிடிப்பு

சுரங்கத்தினுள் கசிப்பு கண்டுபிடிப்பு

by admin

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஊரெழு பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் காவல்துறையினருக்கு இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த கசிப்பு உற்பத்தி இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக  காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மிகவும் நூதனமான முறையில் வீட்டுக்குள்ளேயே கிடங்கு வெட்டி, அதற்குள் கசிப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்திலிருந்து 12 போத்தல் கசிப்பு   மீட்கப்பட்டுள்ளது.சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை கோப்பாய் ராச வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 6 போத்தல் கசிப்பு 29 போத்தல் கோடாவம் மீட்கப்பட்டுள்ளன.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 54 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக கோப்பாய் காவல்துறை பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #சுரங்கம்  #கசிப்பு  #கோப்பாய்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More