178
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் +346 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் அதிகரித்த மரணங்கள் பதிவாகிய நிலையில், நேற்றைய விடுமறை நாளான இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளில் மரணங்கள் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் பிரித்தானியாவின் மொத்த மரணங்கள், 31,587 ஆக அதிகரித்துள்ளன. அத்துடன் புதிதாக இனம்காணப்பட்ட +3,896 தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215,260 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை முன்னைய நாட்களை விட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக பதிவாகி இருக்கிறது.
Spread the love