Home உலகம் மாலியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

by admin

 
வடக்கு மாலியின் காவோ நகரில் உள்ள  ராணுவ முகாமுக்கு அண்மையில்  வெடிகுண்டு நிரப்பிய வாகனம் ஒன்றை  செலுத்தி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி அதனை வெடிக்கச் செய்துள்ளதில்  அப்பகுதியில் கூடியிருந்த   25 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும்  37 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஐ.நா. அமைதிப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாலியில் 2013ம் ஆண்டு பிரான்ஸ் தமையிலான கூட்டுப்படை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, வடக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த தீவிரவாத குழுக்கள் ஒடுக்கப்பட்ட போதிலும் இன்னும் சில பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் காணப்படுதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More