Home இலங்கைஅறுவடை செய்ய தொழிலாளர்கள் இல்லை – கரும்புத் தோட்டங்கள் தீவைத்து எரிப்பு

அறுவடை செய்ய தொழிலாளர்கள் இல்லை – கரும்புத் தோட்டங்கள் தீவைத்து எரிப்பு

by admin


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைக்காததால் விவசாயிகள் கரும்புத் தோட்டங்கள் தீ வைத்து எரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் அரவை கரும்புகள் பயிரிட்டுள்ளனர். அவை தற்போது நன்றாக விளைந்துள்ளன. வழமையாக அவற்றை வெளிமாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வந்து, தங்கியிருந்து கரும்புகளை வெட்டி கொடுத்து வந்தனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக, தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டதனால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரவை கரும்புகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

தங்களது தோட்டங்களில் அரைகுறையாக வெட்டப்பட்ட நிலையில் இருக்கும் அரவை கரும்புகள் மாதக் கணக்கில் வெட்டப்படாமல் இருப்பதால் சில விவசாயிகள் அரவை கரும்புகளைத் தீ வைத்து பாதுகாப்பாக எரித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #அறுவடை   #தொழிலாளர்கள்  #கரும்பு  #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More