Getty Images
பிரேசிலில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு ஜனாதிபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் பணிவிலகல் அறிவிப்பை விடுத்துள்ளார்.
பிரேசிலில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துவர, அந்நாட்டில் உடற்பயிற்சி மையங்கள், மற்றும் அழகு நிலையங்களை திறக்க ஜனாதிபதி ஜெயீர் போல்சீனாரோ உத்தரவு பிறப்பித்ததை, சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் கடுமையாக விமர்சித்திருந்தார். எனினும் பணிவிலகுவதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இவருக்கு முன் இருந்த அமைச்சர் பணியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டார். நெல்சன் டைக் அமைச்சராக பதவியேற்று ஒருமாதம் நிறைவுபெறாத நிலையில் பணிவிலகல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று பரவலை சாதாரண காய்ச்சல் என்று பிரேசில் ஜனாதிபதி போல்சீனாரோ கூறியது ஏற்கனவே அங்கு சர்ச்சை ஏற்படுத்தியது. ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக இருக்கும் ஜனாதிபதி போல்சீனாரோ, பொருளாதாரத்தை திறக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.