சோமாலியாவில் நிலவி வருகின்ற மிகவும் மோசமான வறட்சியால் சுமார் 4 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஆபத்திற்கு உள்ளாகி இருப்பதாக ஐநா மனிதநேய அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க 850 மில்லியன் டொலர்களுக்கு மேலாக தேவைப்படுவதாக மனிதநேய விவகார பணிகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து பருவமழை அங்கு பொய்த்து போனதாலும், சில உள்ளுர் மோதல்களாலும் அங்கு மனிதநேய சூழ்நிலை மோசமாகியுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய பஞ்சத்தால் சோமாலியாவில் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்துள்ள நிலைவயில் ஆரம்ப கட்டத்திலேயே நடவடிக்கை எடுப்பதே இன்னொரு பேரழிவை முறியடிக்க உள்ள ஒரே வழி என சோமாலியாவுக்கான ஐநா உதவியின் சிறப்பு பிரதிநிதி பெய்றர் டி கிளேர்க் தெரிவித்துள்ளார்.