திருகோணமலை துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவது குறித்து பேசப்பட்டு வருவதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்த கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தின் இயற்கைத் தன்மையை பேணிப் பாதுகாப்பதற்கும், சீனாவிற்கு வழங்கப்பட்டதனைப் போன்றே இந்தியாவிற்கும் சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலும் திருகோணமலை துறைமுகம் இந்தியாவிடம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற செலவுகள் மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு லாபம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.