புதிதாக அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை ஒரு போதும் அழைக்கவில்லை எனவும், அவரை சந்திக்க கிடைத்த போது புதிய அரசியல் சாசனம் அவசியமில்லை என தாம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது எனக் குறிப்பிட்டுள்ள அவர், பிரச்சினைகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளுக்காக திருத்தங்கள் செய்யப்பட முடியும் எனவும், குரோத உணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுக்கள் வெட்கப்பட வேண்டியவை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்காலத்தில் குரோதப் பேச்சுக்கள் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிலரும் குரோதப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை சம்பந்தனினால் தடுக்க முடியவில்லை எனவும், குரோதப் பேச்சுக்களை தடுக்காமல் சம்பந்தனினால் காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.