“உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும்” என்று மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும்.
சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
இந்த நிறுவனங்கள் காவல்துறையினரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த எடுப்படும்.
ஏனைய மாவட்டங்களை போலவே யாழ்ப்பாண மாவட்டத்திலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு காவல்துறையினரினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அவர் கேட்டுகொண்டார். #உணவகங்கள் #நட்சத்திரவிடுதிகள் #திருமணமண்டபங்கள் #மகேஸ்சேனாரட்ன