கடந்த வாரம் ஏற்பட்ட அம்பன் சூறாவளி தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட காற்றின் தாக்கத்தின் காரணமாக கடந்த 21 ஆம் திகதி மற்றும் அதற்கு பிற்பாடும் தொடர்ச்சியாக யாழ் குடாநாட்டில் காற்றின் தாக்கம் அதிகரித்திருந்தது அதன் அடிப்படையில் சுமார் 130 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளை முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அறிவித்திருந்தார்கள்.
அவர்களுடைய விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு முற் பணமாக பத்தாயிரம் ரூபா வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது 7குடும்பங்களைத் தவிர அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான குறிப்பாக வாழை, பப்பாசி செய்கையாளர்களுக்கும் அவர்களுடைய இழப்பை நாங்கள் மதிப்பீடு செய்து அவற்றை நாங்கள் விவசாய அமைச்சுக்கும் துறை சார்ந்த பிரிவுகளுக்கும் திணைக்களங்களுக்கும் அனுப்பியுள்ளோம்.
இழப்பு தொடர்பாக நாங்கள் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கின்றோம் குறித்த இழப்புக்கள் தொடர்பில் எமக்கு ஏதாவது பணிப்புரை வழங்கப்படுமிடத்து உடனடியாக அதற்குரிய எடுக்கப்படும்.
அதேவேளை சமூர்த்தி 5000 ரூபா நிதி கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தொழிலற்றிருந்த மேலும் தெரிவு செய்யப்பட்ட பட்டியலுக்குரியவர்களுக்கான முதல்கட்ட கொடுப்பனவுகள் யாவும் யாழ் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுவிட்டது.
இது தொடர்பாக ஒரு சில முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளன அந்த முறைப்பாடுகளை நாங்கள் விசாரணைக்குட்படுத்தியிருக்கின்
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் அனைத்து சேவைகளும் முழுமையாக இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்