220
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவுதினம் இன்று (01) யாழ் நூலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் போது யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் இறந்த தாவீது அடிகளார் என அழைக்கப்படும் அருட்தந்தை டேவிட் அடிகளாரின் திருவுருவ படத்திற்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் பதில் முதல்வர் தலைமையில் நூலக வளாகத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர் ஊழியர்கள் ஆகியயோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நூலக எரிக்கப்படட நினைவு நாள் நிகழ்வு முன்னாள் எம்பி எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலும் நூலக நுழைவாயிலில் இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், பொதுமக்கள் என கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். #யாழ்ப்பாணம் #பொதுநூலகம் #எரிப்பு #நினைவுதினம்
Spread the love