கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பல போட்டி போட்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஸ்யா கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது எனவும் அதன் ஆரம்பக்கட்ட சோதனை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிப்பதற்காக 5 பெண்கள் உள்ளிட்ட 50 ராணுவ அதிகாரிகள் ((தன்னார்வலர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ரஸ்ய ராணுவ அமைச்சு தன்னார்வலர்களின் முதல் குழுவுக்கு இன்று புதன்கிழமை மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ராணுவ அமைச்சின் 48-வது மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது
இங்குதான் எபோலா வைரஸ் மற்;றும் மெர்ஸ் வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ரஸ்யாவில் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் நடைமுறை எதிர்வரும் யூலை மாதத்தில் முடிவடையும் எனவும் ராணுவ அமைச்சு தெரிவித்துள்ளது #ரஸ்யா #கொரோனா #தடுப்பூசி